International
மலேசியா

செமிஞ்சே தேர்தல்: பிற்பகல் 3.30 வரை 65% வாக்குப்பதிவு!

செமிஞ்சே, மார்ச் 2 – செமிஞ்சே சட்டமன்ற இடைத்தேர்தலில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய 3.30 மணிவரையில் 65 விழுக்காடு வரையில் வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர்.

பக்காத்தான் வேட்பாளர் ஐமான் ஸைனால் கம்போங் பாரு செமிஞ்சேயில் உள்ள எங்கு ஹுசேய்ன் இடை நிலைப் பள்ளியிலும், தேசிய முன்னணியின் வேட்பாளர் ஸக்காரியா ஹனஃபி கம்போங் செசாப்பான் கெலுபி மேம்பாடு மற்றும் பாதுகாப்பு மண்டபத்திலும் பிஎஸ்எம் வேட்பாளர் நிக் அஃபிக் அப்துல் செமிஞ்சே சமூக மண்டபத்திலும் வாக்களித்தனர்.

இத்தேர்தலுக்கென 116 வாக்களிப்பு முகப்புகளைக் கொண்ட 24 வாக்களிப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. வாக்களிப்பு காலை 8 மணிக்குத் தொடங்கிவிட்டது. மாலை 5.30 மணிக்கு முடிவடையும்.

இத்தொகுதியில் 53,520 பதிவு பெற்ற வாக்களாளர்கள் இருப்பதாகவும் அதில் 109 பேர் பிப்ரவரி 26இல் முன்கூட்டியே வாக்களித்துள்ளனர். பெர்சத்துவைச் சேர்ந்த அதன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜனவரி 11இல் காலமானதை அடுத்து இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இங்கு நடக்கும் நான்கு முனைப்போட்டியில் முகமட் ஐமான், ஸக்காரியா, நிக் அஃபிக் மற்றும் சுயேச்சை வேட்பாளராக குவான் சீ ஹெங் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

வாக்களித்த பின்னர் பேட்டியளித்த வேட்பாளர்கள், வாக்களிப்பு சுமுகமாக நடைபெற வேண்டுமென்றும் தங்களுக்கு யார் நல்லதைச் செய்வார்கள் என்பதை உணர்ந்து பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

The post செமிஞ்சே தேர்தல்: பிற்பகல் 3.30 வரை 65% வாக்குப்பதிவு! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!