International
மலேசியா

செமிஞ்சே தேர்தல்: 1,914 வாக்குகள் வித்தியாசம்; தே.மு. வெற்றி பெற்றது!

செமிஞ்சே, மார்ச் 2 – செமிஞ்சே சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி 1,914 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தேசிய முன்னணி வேட்பாளர் ஸக்காரியா ஹனாஃபி, 19,780 வாக்குகள் பெற்று வெற்றியை நிலைநாட்டினார். பக்காத்தான் வேட்பாளர் ஐமான் ஸைனான் 17,866 வாக்குகள் பெற்றார்.

பி.எஸ்.எம். வேட்பாளர் நிக் அஃபிக் 847 வாக்குகள் பெற்ற வேளையில் சுயேட்சை வேட்பாளர் குவான் சீ ஹெங் 725 வாக்குகள் பெற்றார்.

இத்தொகுதியில் 53,520 பதிவு பெற்ற வாக்காளர்கள் உள்ளனர்.  பக்காத்தான் கூட்டணியைச் சேர்ந்த பெர்சத்து கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜனவரி 11இல் காலமானதை அடுத்து இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது.

The post செமிஞ்சே தேர்தல்: 1,914 வாக்குகள் வித்தியாசம்; தே.மு. வெற்றி பெற்றது! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!