International
மலேசியா

டிரைலர் லோரி கவிழ்ந்து ‘நிட்ரிக்’ ஆசிட் கசிந்தது!

சிரம்பான்,பிப்.9- சிரம்பான் ஆர்&ஆர் ஓய்விடத்திற்கு அருகே, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 270-.5-ஆவது கிலோமீட்டரில் நிட்ரிக் ஆசிட் திரவத்தை ஏற்றிச் சென்ற டிரைலர் லோரி ஒன்று சாலையில் தடம் புரண்டதில், இரு கொள்கலன்கள் உடைந்து அவற்றிலிருந்து அந்த ரசாயனத் திரவம் கசிந்தது.

காலை 5.09 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து தகவல் வந்ததாகவும், உடனடியாக அபாயகரப் பொருள் பிரிவின் 12 உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக சிரம்பான் தீயணைப்பு, மீட்பு நிலையத் தலைவர் முகமட் இட்ரிஸ் தெரிவித்தார்.

அந்த லோரி தலைக்கீழாக தடம் புரண்டதை அடுத்து அந்த லோரியை இழுத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், நிட்ரிக் ஆசிட் கசிந்த இடமும் துப்புரவு செய்யப்பட்டது.

எனினும், இவ்விபத்தில் உயிருடற்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

The post டிரைலர் லோரி கவிழ்ந்து ‘நிட்ரிக்’ ஆசிட் கசிந்தது! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!