International
மலேசியா

டோம்மிக்கு எதிரான முகநூல் பதிவு: நபர்கள் சரணடைய வேண்டும் – போலீஸ்

கோலாலம்பூர், பிப். 28 – சட்டத்துறைத் தலைவர் டோம்மி தோமஸை இஸ்லாத்துக்கு எதிரானவர் என நிந்தித்து சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ள நபர்கள் தாமாக முன்வந்து போலீஸிடம் சரணடைய வேண்டுமென போலீஸ் படையின் துணைத் தலைவர் டான்ஶ்ரீ நூர் ரஷிட் இப்ராஹிம் வலியிறுத்தியுள்ளார்.

அந்தக் குற்றமானது குற்றவியல் சட்டம் 500இன் கீழ் விசாரிக்கப்படுவதாகவும் அந்தப் பதிவை பதிவேற்றியவர்களும் அதனை ஊடகங்களில் பகிர்ந்து கொண்டவர்களும் சரணடைய வேண்டுமென நூர் ரஷிட் கேட்டுக் கொண்டார்.

நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் டோம்மி தோமஸின் இரு உதவியாளர்கள் அது பற்றி புத்ரா ஜெயா போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்துள்ளனர்.

The post டோம்மிக்கு எதிரான முகநூல் பதிவு: நபர்கள் சரணடைய வேண்டும் – போலீஸ் appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!