International
மலேசியா

தமிழக ‘தெய்வீக ராகம்’ மக்கள் டிவி நிகழ்ச்சியில் பேரா கலைஞர்கள்!

கோலாலம்பூர், மார்ச். 1 – பேரா மாநில கலைஞர்கள் தமிழகத்தில் மக்கள் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்பாகும் “தெய்வீக ராகம்” நிகழ்ச்சியின் ஒளிப் பதிவினை பிப்ரவரி 16 முதல் 24 வரை மிகச் சிறப்பாக முடித்து கொடுத்து நாடு திரும்பினர்.

திரைப்பட இயக்குனரும், பிரபல நடிகருமான பாக்கியராஜின் நமது மலேசிய மண்ணின் மைந்தர்களை வாழ்த்தி, தன் கைப்பட நற்சான்றிதழ் வழங்கி கெளரவித்தார்.

மக்கள் தொலைக்காட்சியில்,  ஒளிபரப்பாகும் “தெய்வீக ராகம்” நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரும், நியூ மெஸ்ட்ரோ இசைக்குழுவின் தலைவர்  ஜேஜே டேவிட்சனின் அழைப்பின் பேரில், மலேசிய கலைஞர்கள் பங்கேற்றனர்.

பேரா மாநில வெண்ணிலா ஆர்ட்ஸ் இந்திய கலை கலாச்சார சங்கத்தின்” தலைவர் லோகநாதன் தலைமையில் கடந்த மூன்று ஆண்டுகளாக, கலைஞர் தொலைக்காட்சியிலும், மக்கள் தொலைக்காட்சியிலும் பாடி வருகின்றனர். நம் நாட்டு கலைஞர்களை, தமிழகக் கலைஞர்கள் நன்கு ஆதரித்து  வாழ்த்துகளை வழங்கினர்.

The post தமிழக ‘தெய்வீக ராகம்’ மக்கள் டிவி நிகழ்ச்சியில் பேரா கலைஞர்கள்! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!