International
மலேசியா

தற்போது நிலவும் அசாதாரண வெப்பம் இயற்கையானதே – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !

கோலாலம்பூர், மார்ச் 4 – தற்போது நாட்டில் நிலவும் வெப்ப நிலையானது ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் ஒன்று, அது பற்றி பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் ஜைலான் சைமன் தெரிவித்தார்.

இந்த வெப்பமானது பிப்ரவரியிலிருந்து ஏப்ரல் மாதம் வரை வடகிழக்குப் பருவகாலத்தில் மழை குறைந்த அளவே பெய்வதாலும் சூரியன் பூமத்திய ரேகைக்கு நேரெதிரே சஞ்சரிப்பதாலும் அதிக வெப்பத்தை நாம் உணர முடிகிறது.

எனினும், இந்த வெப்பமானது ஏப்ரல் மாத வாக்கில் தணிந்து,  இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் 2016ஆம் ஆண்டு ஏற்பட்டது போன்று எல்-நினோ என்ற மிகையதிக  வெப்பம் ஏற்பட வாய்ப்பு இல்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.

வட மாநிலங்களான பெர்லிஸ், கெடா மற்றும் வட பேராவில் வெப்பம் நிலை 37 பாகை செல்ஸியஸ் வரை குறியீடு காட்டுகின்றது. இருப்பினும் அது அபாயகர அளவில் இல்லை என்பதால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டார்.

மேலும், மழை குறைந்த அளவே பெய்வதால் நீர்நிலைகளில் நீர் மட்டும் குறைந்துவருகிறது. இதனால் ஜொகூர் மற்றும் சபா மாநிலங்களில் நீர் பற்றாக்குறை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

இந்தக் கடுமையான வெப்ப நிலைமை தொடருமாயின் செயற்கை மழை பெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அதற்கான செலவு அதிகம் மற்றும் இந்த நடவடிக்கையை பொருத்தமான வானிலையின் போதுதான் செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எது எப்படி இருப்ப்பினும் பொதுமக்கள் அதிகமான நீரைப் பருகுவதோடு வெளி நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டுமன்றும் ஜைலான் கேட்டுக் கொண்டார்.

The post தற்போது நிலவும் அசாதாரண வெப்பம் இயற்கையானதே – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!