International
மலேசியா

தே.மு. கூட்டம்; ‘நஸ்ரி வந்தால் நாங்கள் வரமாட்டோம்! -மசீச- மஇகா அறிவிப்பு

கோலாலம்பூர், மார்ச் 5 – வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் தேசிய முன்னணியின் உச்சமன்ற கூட்டத்திற்கு நஸ்ரி அஸிஸ் கலந்து கொண்டால் தாங்கள் கலந்து கொள்ளப் போவதில்லை என மசீசவும் மஇகாவும் அறிவித்துள்ளன.

உறுப்புக் கட்சிளைக் கலந்தாலோசிக்காமலும் அவற்றின் ஒப்புதலுமின்றி கூட்டணியின் விதிமுறை 8.3(டி)க்கு மாறாக, நஸ்ரி தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டதை தாங்கள் அங்கீகரிக்கவில்லை என டத்தோஶ்ரீ வீ கா சியோங்கும் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனும் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

நேற்று, அவர்களிருவரும் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், நஸ்ரி இனவாதமாகப் பேசி சீன மற்றும் தமிழ்ப் பள்ளிகளை மூட வேண்டுமென குறிப்பிட்டது உறுப்புக் கட்சிகளின் மனதைப் புண்படுத்தி இருப்பதால், அவ்விரு கட்சிகளும் தேசிய முன்னணியிலிருந்து விலகி புதிய கூட்டணியை உருவாக்கப் போவதாக அறிவித்திருந்தன.

இதனிடையே, நம்பத் தகுந்த வட்டாரம் ஒன்று, அவ்விரு கட்சிகளும் இணைந்து தேசிய முன்னணியிலிருந்து அம்னோவை விலக்க முனைப்பு காட்டுவதாகக் கோடி காட்டியிருக்கிறது.

The post தே.மு. கூட்டம்; ‘நஸ்ரி வந்தால் நாங்கள் வரமாட்டோம்! -மசீச- மஇகா அறிவிப்பு appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!