International
மலேசியா

தொழிலாளர்களுக்கு எதிராக பேசுவதா? குலசேகரனுக்கு அருள்செல்வம் கேள்வி

செமிஞ்சே, பிப். 28 – மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தொழிலாளர்களின் நலனைக் காப்பதை விடுத்து முதலாளிகளின் பேச்சாளராக இருக்கக் கூடாதென மலேசியா சோஷலிஸ்ட் கட்சியின் (பிஎஸ்எம்) உச்சமன்ற உறுப்பினர் எஸ்.அருள்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய நாட்டின் குறைந்தபட்ச சம்பளம் அதிகமானது என பல முதலாளிகள் முறையிட்டுள்ளதாக குலசேகரன் கூறியிருப்பது அதிருப்தி அளிப்பதாகவும் அவர் எப்போதும் முதலாளிகளின் சார்பில் பேசி தொழிலாளர்களின் நலனைப் புறக்கணிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கோலாலம்பூரில் குடியிருக்க குறைந்தது மாதமொன்றுக்கு 2,700 ரிங்கிட் தேவையென பேங்க் நெகாரா உட்பட பல ஆய்வு மையங்கள் கூறியிருக்கும் வேளையில், 1,100 ரிங்கிட் குறைந்தபட்ச சம்பளம் அதிகமானது என குலசேகரன் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என அருள்செல்வம் குறிப்பிட்டார்.

The post தொழிலாளர்களுக்கு எதிராக பேசுவதா? குலசேகரனுக்கு அருள்செல்வம் கேள்வி appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!