International
மலேசியா

நஜிப் மீதான ஊழல் விசாரணைகள்; அடுத்த வாரம் ஆரம்பம்!

கோலாலம்பூர், பிப். 10- தம்முடைய ஆட்சியின் வீழ்ச்சிக்கு காரணமான மலேசியாவின் மிகப்பெரிய ஊழல் மற்றும் நிதி மோசடி விவகாரம் தொடர்பில் முன்னாள் பிரதமர் நஜிப் மீதான வழக்குகள் அடுத்த வாரம் செவ்வாய்க் கிழமை முதல் அடுக்காகத் தொடங்கவுள்ளன.

மலேசியாவின்முதலீட்டு நிதி நிறுவனமான 1எம்டிபிக்கு சொந்தமான நிதியில் இருந்து 450 கோடி அமெரிக்க டாலர் வரை பணத்தை அபகரித்தாக நஜிப், அவரது குடும்பத்தினர் மற்றும் வேண்டியவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த ஊழல் சுவிட்சர்லாந்து தொடங்கி செய்செல்ஸ் தீவுகள் வரை பரவி இருந்ததாக வெளிவந்த தகவல் உலக அளவில் பேசப்பட்டது.

ஆடம்பர உல்லாசக் கப்பல் வாங்கப்பட்டது முதல் மிக விலையுயர்ந்த வைரங்கள் மற்றும் திரைப்படம் எடுத்தல் வரை நஜிப்பும் அவரது குடும்பத்தினரும் இந்தப் பணத்தை பயனபடுத்தினர் என்ற தகவல்கள் இன்னமும் மலேசியர்கள் மத்தியில் பரபரப்பாகவே இருந்து வருகின்றன.

அந்நிலையில். நஜிப் மீதான ஊழல், நிதி முறைகேடு வழக்குகள் மீதான விசாரணை செவ்வாய்க் கிழமை தொடங்கவுள்ளது.

1எம்டிபியின் துணை நிறுவனமான எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் நிறுவனத்திற்குரிய 42 மில்லியன் ரிங்கிட் பணம், நஜிப்பின் சொந்த வங்கிக் கணக்கில் போடப்பட்டது தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுக்களுக்கான விசாரணையை அவர் எதிர்நோக்கியுள்ளார்.

இதன் தொடர்பில் நிதி மோசடி, நம்பிக்கை மோசடி மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் ஆகிய அடிப்படையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்த அவர் விசாரணை கோரியிருந்தார். இந்த வழக்குகளின் விசாரணை அடுத்த வாரம் செவ்வாயன்று தொடங்கவிருக்கின்றது.

The post நஜிப் மீதான ஊழல் விசாரணைகள்; அடுத்த வாரம் ஆரம்பம்! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!