International
மலேசியா

நாடு முழுவதும் இண்டர்நெட் மையங்கள் மூடப்படுமா? -எம்.சி.எம்.சி. மறுப்பு

கோலாலம்பூர், மார்ச். 10- நாடு முழுவதும் உள்ள இண்டர்நெட் மையங்கள் இழுத்து மூடப்படும் என வெளிவந்த செய்திக்கு மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்.சி.எம்.சி. மறுப்பு தெரிவித்துள்ளது.

இண்டர்நெட் மையங்கள் மூடப்படும் என்று நுசுவரா டெக்லானாலோஜிஸ் சென். பெர். என்ற நிறுவனம் தெரிவித்து இருந்தது. இந்த நிறுவனம், செல்கோம் நிறுவனத்தின் இண்டர்நெட் மையங்களை நிர்வகித்து வரும் ஒரு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யான ஒன்று. இண்டர்நெட் மையங்களை மூடும் எண்ணம் எம்.சி.எம்.சி. க்கு இல்லை என்று அதன் அறிக்கை தெளிவு படுத்தியது.

இப்படியொரு தகவலைக் கவனக்குறைவாக வெளியிட்டிருப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் எம்.சி.எம்.சி. மேலும் விளக்கம் கோரும் என்று அந்த அறிக்கை தெரிவித்தது. தற்போது நாடு தழுவிய அளவில் 870 இண்டர்நெட் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

The post நாடு முழுவதும் இண்டர்நெட் மையங்கள் மூடப்படுமா? -எம்.சி.எம்.சி. மறுப்பு appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!