International
மலேசியா

நான் உண்மையாகத்தான் படித்தேன்!- நஜிப் திட்டவட்டம்

புத்ராஜெயா,பிப்.12- தான் இங்கிலாந்தின், நொட்டிங்ஹம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றத்தை நிரூபிக்கத் தயார் என்று முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.

“என்னுடைய பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பட்டம். அதனை நிரூபிக்க நான் தயார்” என்று புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களின் பட்டப் படிப்பை கடுமையாக விமர்சித்துவந்த நஜிப்பே தற்போது அதே விவகாரத்தில் மாட்டிக் கொண்டுள்ளார்.

நஜிப் நொட்டிங்ஹம் பல்கலைக்கழகத்தில் படித்து முடிக்கவில்லை என்று கெராஞ்சி சட்டமன்ற உறுப்பினர் சோங் ஸெமின் நேற்று சர்ச்சையை எழுப்பியதை அடுத்து, நஜிப் தான் படித்தது உண்மை என்பதை தற்காத்துப் பேசியுள்ளார்.

The post நான் உண்மையாகத்தான் படித்தேன்!- நஜிப் திட்டவட்டம் appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!