International
மலேசியா

நேர்மை மிக்கவர்களை  நீதிபதிகளாக நியமிக்கக் கோரிக்கை 

கோலாலம்பூர், மார்ச். 7- நாட்டில் நியாயமான, நேர்மையான, பாரபட்சமில்லாத நீதி முறைமையை நிலைநாட்ட நேர்மையான, யாருக்கும் தலை வணங்காத நீதிபதிகளை உயர்நிலை நீதிமன்றங்களுக்கு நியமிக்க வேண்டுமென அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகளின் நியமனத்தில் இனம் மற்றும் சமய அம்சங்களை அளவுகோளாக வைக்கக் கூடாதென்றும் அவர்வளின் பின்புலத்தை நன்கு ஆராய்ந்த பின்னரே, பதவிகளில் அமர்த்த வேண்டுமெனவும் வலியுறுத்தப் பட்டுள்ளது.

இதனிடையே, தலைமை நீதிபதி துன் ரிச்சர்ட் மலாஞ்சும் மற்றும் கூட்டரசு நீதிமன்றத்தின் 4 நீதிபதிகளும் இவ்வாண்டு பதவி ஓய்வு பெறவிருப்பதால், மக்களின் நம்பிகையைப் பெற்றவர்களையே உயர்நிலை நீதிபதிகளாக நியமிக்க வேண்டுமென வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் ரகுநாத் கேசவன் வலியுறுத்தினார்.

உயர்நிலை நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட சிலர் அனுபவம் குறைந்திருப்பதால், அந்தப் பதவிகளுக்குப் பரந்த அனுபவம் நிறைந்த வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டுமென வழக்கறிஞர் ஶ்ரீராம் கேட்டுக் கொண்டார்.

The post நேர்மை மிக்கவர்களை  நீதிபதிகளாக நியமிக்கக் கோரிக்கை  appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!