International
மலேசியா

பசார் போரோங்கில் திடீர்ச் சோதனை; 73 சட்டவிரோத தொழிலாளர்கள் கைது!

செர்டாங், மார்ச். 4- ஶ்ரீகெம்பாங்கானிலுள்ள பசார் போரோங்கில்
போலீசார் நடத்திய சோதனை திடீர்ச் நடவடிக்கையின் போது சட்டவிரோதக் குடியேறிகள் 73 பேர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று இரவு 8 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனை நடவடிக்கையின் போது வங்காள தேசம், இந்தியா, பாகிஸ்தான், ஶ்ரீலங்கா, மியன்மார் இந்தோனிசியா  அகிய நாடுகளைச் சேர்ந்த நூற்றுக் கணக்கனோர் பரிசோதிக்கப் பட்டனர்.

இந்தச் சோதனனையின் போது முறையான ஆவணங்கள் இல்லாமல் இருந்த 4 பெண்கள் உள்பட 73 பேரைத் தாங்கள் கைது செய்ததாக செர்டாங் ஓசிபிடி இஸ்மாயில் பொர்ஹான் தெரிவித்தார்.

முறையான ஆவணங்கள் இல்லாமல வெளிநாட்டுக்காரர்கள் இந்த பசார் போரோங்கில் பணிபுரிகிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தாங்கள் இந்தச் சோதனை நடவடிக்கையில் இறங்கியதாக அவர் சொன்னார்.

The post பசார் போரோங்கில் திடீர்ச் சோதனை; 73 சட்டவிரோத தொழிலாளர்கள் கைது! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!