International
மலேசியா

‘படுத்துக் கொண்டு காரி உமிழாதீர்!’ நஜிப்புக்கு அஸ்மின் மறைமுக பதிலடி

கோலாலம்பூர், மார்ச் 6 – நிதியமைச்சின் கீழுள்ள கஸானா நேஷனல் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள 600 கோடி ரிங்கிட் நட்டம் பற்றி நஜிப் ரசாக் மற்றும் அஸ்மின் இடையே சமூக ஊடகத்தில் அறிக்கைப் போர் மூண்டுள்ளது.

முன்னாள் பிரதமர் நஜிப், தமது 10 ஆண்டு கால பிரதமர் பதவியின்போது, கஸானா நிறுவனம் நட்டமடைந்ததில்லை என்றும் 2017ஆம் ஆண்டில் 3,370 கோடியாக இருந்த அதன் மொத்த சொத்து 224 விழுக்காடு (8,230 கோடி) உயர்ந்து 11,600 கோடி ரிங்கிட்டாக அதிகரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், பக்காத்தான் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், 2,500 கோடி நட்டமடைந்து 9,100 கோடியாகக் குறைந்திருப்பதாக நஜிப் சாடியிருந்தார்.

2,500 கோடி ரிங்கிட் என்பது பெரும் தொகை என்றும் அதனைக் கொண்டு 1எம்டிபியின் கடனை அடைக்கலாம் அல்லது 5,500 கோடி ரிங்கிட் செலவிலான கிழக்குக் கரை ரயில் திட்டத்திற்கான செலவை ஈடுகட்டலாம்.

மேலும், 9,100 கோடி என்பது இன்னமும் சிறிய தொகையே என்றும் கஸானாவின் சொத்துகளைக் குறைந்த விலைக்கும் விற்கலாம் எனவும் கிண்டலடித்து கேலியாகத் தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் நஜீப்.

அதற்குக் காட்டமாகப் பதிலளித்த அஸ்மின், சில தலைவர்கள் தங்களின் அமைச்சர்களுக்குத் தெரியாமலேயே ஊழலைச் செய்து அவர்களையும் நாட்டையும் ஏமாற்றி இருப்பதாக அஸ்மின் அலி தமது பதிவில் சாடியுள்ளனர்.

எதையும் ஆழ்ந்து சிந்திக்காமல் வாய்க்கு வந்ததைக் கூறி, பின்னர் மாட்டிக் கொள்கின்றனர். படுத்துக் கொண்டே காரி உமிழ்ந்தால் அது தங்களின் முகத்தில்தான் விழும் என்பதை சிலர் மறந்து விடுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கஸானா நேஷனல் எதிர்கொண்டுள்ள நட்டம் என்பது பக்காத்தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன் ஏற்பட்ட இழப்பு.. முந்தி இருந்த அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட இழப்பு. உதாரணமாக, கஸானா நேஷனலுக்கு சொந்தமான மலேசிய ஏர்லைன்ஸ் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்துள்ளது என்று அஸ்மின் அலி சொன்னார்.

The post ‘படுத்துக் கொண்டு காரி உமிழாதீர்!’ நஜிப்புக்கு அஸ்மின் மறைமுக பதிலடி appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!