International
மலேசியா

பட்டப்பகலில் அராஜகம்: கடையில் புகுந்து கத்திமுனையில் கொள்ளை! -(Video)

கோலாலம்பூர், மார்ச் 10 – பயனீட்டாளருக்கான வசதிக் கடையில் பாராங் கத்தியோடு நுழைந்த திருடர்கள் ரொக்கத்தையும் பொருள்களையும் களவாடிச் சென்ற சம்பவம் உள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இப்போது சமூக ஊடகங்களில் பரபரப்பாக பரவி வருகிறது.

*** Video source: the sundaily

ஷா ஆலம் செக்‌ஷன் 17இல் உள்ள அந்தக் கடையில் இரு ஆடவர்கள் நுழைந்து, அங்கிருந்த வாடிக்கையாளர்களை மிரட்டி பின்வாங்க வைத்து, கணக்கரிடமிருந்து ரிம. 200 ரொக்கத்தை அபகரித்ததோடு 3 கார்ட்டன் சிகரெட்டுகளையும் திருடிச் சென்றனர்.

அந்தக் காட்சியானது சிசிடிவியில் பதிவு செய்யப்பட்டு வைரலாகப் பரவியது. அது பற்றிக் குறிப்பிட்ட ஷா ஆலம் ஏசிபி பஹாருடின் மாட் தைப், திருடர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அந்த வழக்கு குற்றவியல் சட்டம், 395/397 ஆகிய பிரிவுகளில் விசாரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

The post பட்டப்பகலில் அராஜகம்: கடையில் புகுந்து கத்திமுனையில் கொள்ளை! -(Video) appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!