International
மலேசியா

பண மோசடி:ஸாஹிட் வழக்கு: உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்

கோலாலம்பூர், பிப்.28- யாயாசான் அகால்புடிக்கு சொந்தமான பல மில்லியன் பணத்தை தவறாக பயன்படுத்தியாக முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி மீது சுமத்தப்பட்டுள்ள 47 குற்றச்சாட்டுகள் தொடர்பிலான வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப் பட்டுள்ளது.

செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெறவிருந்த அந்த் விசாரணை, உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப் பட வேண்டும் என்று என்று ஸாஹிட் தரப்பினரின் விண்ணப்பத்திற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளதாக மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் சார்பில் வாதாடும் துணை பொது வழக்கறிஞர் அகமட் சஸீலி நீதிபதி ரொஸினா அயூப்பிடன் கூறினார்.

“அந்த வழக்கு விசாரணையானது உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப் பட வேண்டும் என்ற விண்ணப்பம் குறித்தான விசாரணை கடந்த 21-ஆம் தேதியன்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அந்த விண்ணப்பத்திற்கு அனுமதி வழங்கப் பட்டது. ஆனால், தீர்ப்பு என்று விதிக்கப் படும் என்பது குறித்து தகவல் தெரிவிக்கப் படவில்லை” என்றார் அவர்.

அவ்விவகாரம் தொடர்பில் கிட்டத்தட்ட 300 ஆவணங்களை அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தற்காப்பு வழக்கறிஞர்களிடம் வழங்கி உள்ளனர் என்று அகமட் தெரிவித்தார். அது தொடர்பிலான வழக்கு, மார்ச் 26-ஆம் தேதியன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று நீதிபதி அறிவித்தார்.

The post பண மோசடி:ஸாஹிட் வழக்கு: உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!