International
மலேசியா

‘பத்துமலை விவகாரத்தில் தலையிடாதே!’ அருண் துரைசாமிக்கு அமைப்புகள் எச்சரிக்கை

கோலாலம்பூர், மார்ச். 11- பத்துமலை ஆலய விவகாரத்தில் உருமாற்றப் பணிக் குழுவைச் சேர்ந்த அருண் துரைசாமி தலையிட வேண்டியதில்லை என 16 இந்திய அரசு சாரா இயங்கங்கள் (NGO) வலியுறுத்தியுள்ளன.

தற்போது, ஶ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தின் நிர்வாகக் குழுவின் மீது வழக்கு இருந்தாலும் அதன் 69 நிர்வாக உறுப்பினர்களைக் கலைக்கும் விதமாக நிர்வாகத்தின் சிறப்புப் பொதுக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென்று சொல்வதற்கு அருணுக்கு உரிமை இல்லை என அந்த அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

இது பற்றிக் குறிப்பிட்ட அந்த அமைப்புகளின் பேச்சாளர் மைத்திரேயர் முத்துராமலிங்கம், அருண் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டாமென கேட்டுக் கொண்டார்.

ஆலயத்தின் நில கொள்முதலில் நிர்வாகத்தின் 8 பேர் சம்பந்தப் பட்டுள்ளதாகக் கூறும் அருண், ஒரு குழப்பவாதி. அந்த வழக்கை ஊழல் தடுப்பு ஆணையம் இன்னும் விசாரித்து வருவதால், அதிலிருந்து அருண் விலகி இருக்க வேண்டும்.

அவர் ஆலய நிதியை அபகரிக்கும் நோக்கத்தில்தான் அம்மாதிரியாகச் செயல்படுவதாக கருதுகிறோம். அவர் நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் மைத்திரேயர் வலியுறுத்தினார்.

அந்தக் குழு ஆலயத்தின் வங்கிக் கணக்கைப் பரிசோதிக்க வேண்டுமென அருண் கூறுவது, நிர்வாகத்தைத் தன் கையில் எடுத்துக் கொள்ளவே என்றும், அதில் பெருந்தொகை சம்பந்தப் பட்டுள்ளதால் அருண் இந்த விவகாரத்தைக் குழப்ப நினைப்பதாகவும் அவர் சாடினார்.

நில கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக சந்தேகத்தின் பேரில் எம்ஏசிசி, கடந்த திங்கட்கிழமை, கோத்தா டமான்சாராவில் உள்ள டான்ஶ்ரீ நடராஜாவின் இல்லத்தில் அதிரடி சோதனை நடத்தி, 10 லட்சம் மதிப்பிலான ரொக்கம், தங்க ஆபரணங்கள் முதலியவற்றைக் கைப்பற்றினர்.

தடுத்து வைக்கப்பட்டிருந்த நடராஜா, அவரின் புதல்வர் சிவகுமார் மற்றும் இன்னொருவரும் பிணையில் விடுவிக்கப் பட்டனர்.

மேற்கண்ட அதிரடி சோதனையானது கோலாலம்பூர், ஜாலான் கூச்சிங்கில் உள்ள 4.5 ஏக்கர் நிலம் சம்பந்தமானது என்றும் 25 கோடி ரிங்கிட் மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ஆலயம் 25 விழுக்காடு ஆதாயம் பெற இணக்கம் காணப் பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

The post ‘பத்துமலை விவகாரத்தில் தலையிடாதே!’ அருண் துரைசாமிக்கு அமைப்புகள் எச்சரிக்கை appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!