International
மலேசியா

பளிங்குத் தரை வீணாகிவிடுமாம்… சக்கர நாற்காலியில் வந்தவருக்கு கடைக்குள் நுழைய அனுமதி இல்லை!

ஜோர்ஜ் டவுன்,பிப்.11- பேரங்காடி ஒன்றிலுள்ள ஒரு சாக்லட் கடைக்குள் நுழைய சக்கர நாற்காலியில் இருந்த பெண்மணி ஒருவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்ற செய்தி வலைவாசிகள் மத்தியில் மிகவும் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

ரோஸித்தா ஒத்மான் (Rozita Othman) என்பவர் இந்தச் செய்தியை தனது பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். அதன் பிறகு, இவ்விவகாரம் சமூக ஊடங்கங்களில் அதிவேகமாக பரவியது.

ரோஸித்தா தனது அண்ணியை பெரில்’ஸ் (Beryl’s) சாக்லட் கடைக்கு கொண்டுச் சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடையின் பளிங்குத் தரையில் கீறல் விழுந்துவிடும் என்பதற்காக ரோஸித்தாவின் அண்ணியை அக்கடைப் பணியாளர் உள்ளே அனுமதிக்கவில்லையாம்.

இந்தச் செய்தி வலைவாசிகள் மத்தியில் வைரல் ஆனதை அடுத்து பலரும் அந்தக் கடைக்கு செல்வதை வாடிக்கையாளர்கள் தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் பலரும் கருத்து வெளியிட்டிருந்தனர்.

இதனிடையே, இத்தகைய விதிமுறைகள் எல்லாம் எங்கள் கடையில் இல்லை. புதிதாக வேலைக்குச் சேர்ந்த பணியாளர் தெரியாமல் அப்படிச் செய்து விட்டார். நடந்த சம்பவத்திற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்” என்று பெரில்’ஸ் ஸ்டோர் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

The post பளிங்குத் தரை வீணாகிவிடுமாம்… சக்கர நாற்காலியில் வந்தவருக்கு கடைக்குள் நுழைய அனுமதி இல்லை! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!