International
மலேசியா

பார்க்கிங் கூப்பன்களால் அவதி ; கோலாலம்பூர், கிள்ளான் பள்ளத்தாக்கு மக்களுக்கு விடிவு பிறக்குமா? -(Video)

கோலாலம்பூர், மார்ச்.1- கோலாலம்பூர் போன்ற பெருநகர் பகுதிகளில் வாகன பார்க்கிங்கான செலவே ஒரு சுமையாக அமைந்து விட்ட நிலையில், அதற்கான கூப்பன்களை வாங்குவதிலும் அதனை பயன்படுத்துவதிலும் மிகப் பெரிய சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக மக்கள் கருத்துக் கூறியுள்ளனர்.

கோலாலம்பூர் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளை உள்ளடக்கிய நகராட்சி மன்றங்கள் கலந்தாலோசித்து எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான பார்க்கிங் கூப்பன் முறையை அமல் படுத்த வேண்டும் என்றும் அவர்கள் மேலும் வலியுறுத்தினர்

பேராக் மாநிலத்தில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் தொடக்கம், அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான பார்க்கிங் கூப்பன் முறை அமல்படுத்தப்படவுள்ள நிலையில், மலேசியாவின் மையப் பகுதியாகவும், அதிகமான வாகன போக்குவரத்து நெரிசல் கொண்ட இடமாகவும் விளங்கும் கோலாலம்பூர் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கில் இதுபோன்ற முறை வேண்டும் என்று ‘வணக்கம் மலேசியா’ கருத்து கேட்டப்போது பலர் கருத்துரைத்தனர்.  

மேலும் விரிவான தகவலை காணொளிச் செய்தியில் காண்க:

The post பார்க்கிங் கூப்பன்களால் அவதி ; கோலாலம்பூர், கிள்ளான் பள்ளத்தாக்கு மக்களுக்கு விடிவு பிறக்குமா? -(Video) appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!