International
மலேசியா

பிகேஆர் கட்சியில் இருந்து அஸ்மின் அலி நீக்கப்பட்டாரா? -அது வதந்தி!

கோலாலம்பூர், பிப்.12- பிகேஆர் கட்சியின் துணைத் தலைவரான அஸ்மின் அலி அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார் என சமூக ஊடகங்களில் நேற்றிரவு வெளியான தகவல்களை அக்கட்சி மறுத்து இருக்கிறது.

நேற்று நடந்த கட்சி நிர்வாகக் கூட்டத்தில் அஸ்மின்அலி விலக்கப்பட்டார் என்று அந்த சமூக ஊடகத் தகவல்கள் கூறும் நிலையில், அப்படி எந்தவொரு கூட்டமும் நடக்கவேயில்லை என்று பிகேஆரின் தகவல் தொடர்புப் பிரிவு இயக்குனர் ஷாம்சுல் இஸ்கண்டார் தெரிவித்தார்.

இவை வெறும் வதந்திகளே, எனவே அவை வதந்தியே இருந்து விட்டு போகட்டும் என்று அவர் சொன்னார். கட்சியின் உதவித்தலைவர் ரஃபிஸி ரம்லியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே அஸ்மின் விலக்கப்படுவதற்குக் காரணம் என்று அந்தச் செய்திகள் முன்பு தெரிவித்தன.

The post பிகேஆர் கட்சியில் இருந்து அஸ்மின் அலி நீக்கப்பட்டாரா? -அது வதந்தி! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!