International
மலேசியா

பினாங்கு கடலடி சுரங்கப் பாதைத் திட்டத்தில் ஊழலா?  குத்தகை நிறுவனம் மறுப்பு

கோலாலம்பூர், மார்ச் 4 – பினாங்கில் நிர்மாணிக்கப்படும் கடலடி சுரங்கப் பாதைத் திட்டத்தில் தாம் லஞ்சம் கொடுக்க முனைந்ததாகக் கூறப்படுவதில் உண்மை இல்லையென அத்திட்டத்தின்  குத்தகையாளரான கொண்சோர்டியம் ஸெனித் குத்தகை  நிறுவனத் தலைவர் ஸாருல் அகமட் முகமட் சுல்கிப்லி தெரிவித்தார்.

அது சம்பந்தமாக மலேசிய கினி இணைய எழுத்தாளர்  ராஜா பெத்ராவின் செய்திகளும் ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு அனுப்பப்பட்ட புகார்களும் இட்டுக்கட்டிய பொய்கள் என்றும் அவை தனது,  நிறுவனம் மற்றும் மாநில அரசுக்கும் அவப்பெயரை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு முன்னர்,  தாம் 11 நாள்கள் ஊழல் தடுப்பு ஆணையத்தினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் 40 நாள்களாக அதன்  அலுவலகத்துக்கு விசாரணைக்காக நடையாய் நடந்ததாகவும் தங்கள் நிறுவனத்தின் கணக்குகள் யாவும் முழுமையாகச் சோதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்திட்டம் ஒரு மெகா திட்டமானதால்,  அதற்கு தரப்பட்ட விலைப்புள்ளி நியாயமானதாகவும்  நேர்மையானதாகவும் இருந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இது சம்பந்தமாக சில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் விசாரிக்கபட்டுள்ளனர். ஆனால்,  யார் மீதும் குற்றம் சுமத்தப்படவில்லை. இந்தக் கடலடி சுரங்கப் பாதையானது பினாங்கின் கர்னி டிரைவ், பூலாவ் திக்குஸ், தஞ்சோங் தோக்கோங்  மற்றும் தஞ்சோங் பூங்கா ஆகிய பகுதிகளை இணைப்பதாகும். 14ஆவது பொதுத்தேர்தலுக்கு முன்னர், அதன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

The post பினாங்கு கடலடி சுரங்கப் பாதைத் திட்டத்தில் ஊழலா?  குத்தகை நிறுவனம் மறுப்பு appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!