International
மலேசியா

பிரபல மலேசிய நடனக் கலைஞர் ‘அஸ்தானா’ ரவி ஷங்கர் காலமானார்!

கோலாலம்பூர், மார்ச். 6 – மலேசியாவின் புகழ்ப்பெற்ற நடனக் கலைஞர்களில் ஒருவரான அஸ்தானா ஆர்ட்ஸ் ரவிஷங்கர் (வயது 42) நேற்றிரவு 11.30 மணியளவில் காலமானார்.

நோய்வாய்ப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அந்தச் சிகிச்சைக்கு பலனின்றி அவர் உயிர்நீத்தார். இரத்தத்தில் நச்சு கிருமிகள் கலந்து விட்டதால் அவர் நோய்வாய்ப் பட்டார்.

தாம் நடத்திய அஸ்தானா நடனப் பள்ளி மூலம் பல இளம் நடனக் கலைஞர்களை உருவாக்குவதில் சிறந்த பங்களிப்பைச் செய்தவர் ரவி ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுச் செய்தி மலேசியாவின் கலையுலக வட்டாரத்தில் கடும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அவருடைய நல்லுடல் பிரிக்பீல்ட்ஸிலுள்ள அஸ்தானா ஆர்ட்ஸ் நடனப் பள்ளியில் வைக்கப்பட்டு, இறுதி மரியாதை செலுத்தப்பட்ட பின்னர் இன்று மதியம் 3 மணிக்கு மேல் செராஸ் தகன மையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

The post பிரபல மலேசிய நடனக் கலைஞர் ‘அஸ்தானா’ ரவி ஷங்கர் காலமானார்! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!