International
மலேசியா

புந்தோங் தேவிஸ்ரீ மகா காளியம்மன் ஆலய தேர்தல்: பெருமாள் தலைவராக தேர்வு!

ஈப்போ, மார்ச். 3- புந்தோங்கில் தேவிஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத் தேர்தலில் தலைவர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்த கே. பெருமாள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இப்பதவிக்கு போட்டியிட்ட அதன் நடப்புத் தலைவர் இருதயம் செபாஸ்தியர் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் வாபஸ் பெற்றுக் கொண்டதால் போட்டி நிகழவில்லை. மிகவும் பரபரப்பான சூழ் நிலையில் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்த தேர்தல் புந்தோங்கில் உள்ள அருளொளி மண்டபத்தில் நடைபெற்றது.
துணைத் தலைவர் பதவிக்கு ரா. நாகேந்திரன், செயலாளர் பதவிக்கு ச.காளிதாஸ் ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

துணைச் செயலாளர் பதவிக்கு கே. தியாகுவை எதிர்த்து முத்து என்பவர் போட்டியிடுகிறார் . இதில் தியாகு தனது பதவியை தக்க வைத்துக் கொண்டார்.

பொருளாளராக இருந்து வந்த ஆர் . விமலன் மீண்டும் போட்டியிடவில்லை.
அப்பதவிக்கு சந்தரசேகரன் மற்றும் மகேந்திரன் ஆகிய இருவருக்கு இடையே போட்டி நிலவியது. அதில் சந்திரசேகரன் வெற்றிப் பெற்றார்.

15 நிர்வாகப் பொறுப்புக்கு 21 பேர் போட்டியிட்டனர் அதில் 15 பேர் முறையே தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்தலை ‘ஆசிரியர் மணி’ இரா. மாணிக்கம் நடத்திக் கொடுத்தார் .

The post புந்தோங் தேவிஸ்ரீ மகா காளியம்மன் ஆலய தேர்தல்: பெருமாள் தலைவராக தேர்வு! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!