International
மலேசியா

புந்தோங் வட்டார இந்தியர்களுக்கான தே. மு. அரசின் நிலத் திட்டம் ரத்து!

ஈப்போ, பிப். 9- புந்தோங் வட்டாரத்தில் புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்த குடும்பங்களை மறுகுடியேற்றம் செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ‘பத்துகாஜா பெம்பான் நிலத்திட்டம்’ ரத்து செய்யப்பட்டுள்ளது. சொந்த நிலத்தில் வீடுகட்டி வாழ 133 இந்தியக் குடும்பங்கள் கொண்டிருந்த ஆசையில் மண் விழுந்தது.

அந்த நிலத்திட்டம் ரத்தாகி விட்டதை உறுதி செய்த புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆ. சிவசுப்பிரமணியம், புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்தவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேற்ற தற்போது திட்டம் வகுக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.

## தே.மு.அரசு, இந்தியர்களுக்காக  முன்பு ஒதுக்கிய வீட்டு நிலம்…..

கம்போங் செக்கடி உட்பட அதன் சுற்றுவட்டாரத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டுகளுக்கு முன்பு புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்தவர்களுக்கு நிரந்த இடம் வழங்கப்பட வேண்டும் கடந்த 1996டஆம் ஆண்டு முதல் ம.இ.கா. நடவடிக்கை எடுத்து வந்தது.

பல போராட்டங்களுக்கு பிறகு 2014 ஆம் ஆண்டு, பெம்பானில் 145 ஏக்கர் நில ஒதுக்கீட்டை தேசிய முன்னணி அரசாங்கம் செய்தது. அந்த நிலத்தை சீர் செய்ய முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் வெ. 50 லட்சம் வழங்கினார் .

அங்கு சீர் செய்யப்பட்ட நிலத்தில் தொடக்கமாக 133 குடும்பங்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட சமயத்தில் தேசிய முன்னணி ஆட்சி மாறியது.

மாநிலம் மற்றும் மத்திய ஆட்சியைப பிடித்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி, பெம்பான் நிலத்திட்டம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தைப பெற்றது.

அந்த நில விவகாரத்திற்கு தீர்வுக்காண தொடக்கத்தில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஏ. சிவநேசன் நடவடிக்கை எடுத்தார். பின்னர் அதனைக் கண்காணிக்க புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆ. சிவசுப்பிரமணியத்திடம் ஒப்படைத்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்துரைத்த சிவசுப்பிரமணியம் , புந்தோங் வட்டாரத்தில் நிலப் பிரச்சனையை எதிர்நோக்கி வரும் குடும்பங்கள், புந்தோங்கில் நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் குடியேற்றப்படும் என்று கூறியுள்ளார். நிர்மாணிக்கப்படும் வீடுகள், பெம்பான் நிலத்திட்டத்தில் பதிவான மக்களுக்கு சிறப்பு விலையில் விற்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

The post புந்தோங் வட்டார இந்தியர்களுக்கான தே. மு. அரசின் நிலத் திட்டம் ரத்து! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!