ஈப்போ, பிப். 9- புந்தோங் வட்டாரத்தில் புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்த குடும்பங்களை மறுகுடியேற்ற ஒதுக்கீடு செய்யப்பட்ட பத்துகாஜாவில் உள்ள பெம்பான் நிலத்திட்டம் ரத்து செய்யப்பட்டதாக வெளியான தகவலால் அதிரச்சி அடைந்த மக்கள் இன்று போலீசில் புகார் செய்தனர்
புந்தோங் போலீசில் புகார் செய்த அவர்கள், முந்திய அரசாங்கம் அறிவித்ததுபோல் அனைவருக்கும் நிலத்தை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்
கம்போங் செக்கடி உட்பட அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்தவர்களுக்கு நிரந்த இடம் வழங்க வேண்டும் என்ற பல போராட்டங்களுக்கு பிறகு 2014 ஆம் ஆண்டு பெம்பானில் 145 ஏக்கர் நில ஒதுக்கீட்டை தேசிய முன்னணி அரசாங்கம் செய்திருந்தது.
அந்த நிலத்தை வழங்க அரசாங்கம் தயார் நிலையில்இருந்த வேளையில் அரசு கைமாறியது. புதிய அரசாங்கம் அந்த திட்டத்தை ரத்து செய்து அனைவரையும் அடுக்குமாடி வீட்டில் குடியேற்ற திட்டம் வகுத்துள்ளதாக இன்று காலையில் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆ. சிவசுப்பிரமணியம் செய்துள்ள அறிவிப்பை கேட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தங்களுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட நிலத்தை பறிக்கக்கூடாது என்றும் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் இன்று பிற்பகலில் போலீஸ் புகார் செய்தனர்
The post பெம்பான் நிலத்திட்டம் ரத்து: பாதிக்கப்பட்ட இந்தியர்கள் போலீசில் புகார் appeared first on Vanakkam Malaysia.
