International
மலேசியா

பெம்பான் நில விவகாரம்: மந்திரி புசார் அலுவலகத்தில் இந்தியர்கள் மகஜர்!

ஈப்போ, மார்ச். 6- பெம்பான் நில விவகாரத்திற்கு தீர்வுக் காண மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமாட் பைசால் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் இன்று மாநில மந்திரி புசார் அலுவலகத்தில் மகஜர் வழங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தில் புந்தோங்கில் புறம்போக்கு நிலத்தில் முன்பு வசித்து வந்த இந்தியர்களைக் குடியேற்ற தேசிய முன்னணி அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியிருந்தது.

ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் மாநில ஆட்சி உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட ஏ. சிவநேசன் நடத்திய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இந்த நிலத்திட்டத்தில் அறிவித்தபடி அங்கீகரிக்கப் பட்டவர்களுக்கு தீபாவளி பரிசாக நிலம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை செய்திருந்தார்.

இந்தச் சந்திப்பில் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவக்குமார், புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆ.சிவசுப்பிரமணியமும் உடன் இருந்தனர் .

அதன் பின்னர் அந்த நிலத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கும் பொறுப்பு ஆ.சிவசுப்பிரமணியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த மாதம் சிவசுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையின் வழி பெம்பான் நிலத்திட்டம் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சியான தகவலை வெளியிட்டு, பெம்பான் நிலத்திட்டத்தில் தொடக்கமாக குடியேற காத்திருந்த 133 குடும்பங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அவர்கள் அனைவருக்கும், புந்தோங்கில் விரைவில் கட்டப்படவிருக்கும் அடுக்குமாடி வீடுகளில் குடியேற்ற வாய்ப்பு வழங்கப்படும் என்று குறிப்பிட்டார் .

இதனை ஆட்சேபித்து 133 குடும்பங்களி்ன் சார்பில், மாநில மந்திரி புசார் அலுவலகம் வந்த டி.தேவசிகாமணி, எம். சிவா மற்றும் வி. சந்திரசேகர் ஆகியோர் மகஜர் வழங்கினர். அதனை மாநில மந்திரி புசாரின் சிறப்பு அதிகாரி கைருள் ஷாரின் பெற்றுக்கொண்டதுடன் அவர்களிடம் விளக்கங்களையும் பெற்றார்

பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் முன் வைத்த கோரிக்கைகளில் இந்த நிலவிவகாரத்திற்கு தீர்வுக் காண வேண்டும், மக்களுடன் சந்திப்பை நடத்தவேண்டும், சம்பந்தப்பட்ட மக்களிடம் வாக்குறுதிப்படி நிலத்தை ஒப்படைக்க வேண்டும் ஆகியவை அடங்கும்.

The post பெம்பான் நில விவகாரம்: மந்திரி புசார் அலுவலகத்தில் இந்தியர்கள் மகஜர்! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!