International
மலேசியா

பேரா முழுவதும் ஒரே மாதிரியான கார் நிறுத்துமிட கூப்பன் அறிமுகம்!

ஈப்போ, பிப்.20- பேரா மாநிலத்தில் உள்ள 15 ஊராட்சி மன்றங்களில் கார் நிறுத்துவதற்காக விற்கப்படும் கட்டணக் கூப்பன்கள் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து ஒருமுகப் படுத்தப்படும் என்று மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமாட் பைசால் கூறினார் .

நடைமுறையில் தர்போது அந்தந்த ஊராட்சி மன்றங்களில் தனித் தனி கூப்பன்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

இப்போது புதிதாக அறிமுகப் படுத்தப்படும் கூப்பன்கள், பேரா மாநிலத்தில் எங்கு சென்றாலும் வாகனமோட்டிகள் பயன்படுத்துவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது என்று அமாட் பைசால் சொன்னார்.

இன்று நடைபெற்ற மாநில ஆட்சிக் குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் ஒருங்கிணைக்கப்பட்ட கூப்பன்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்த  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இந்த விபரத்தை வெளியிட்டார்.

அதன் பின்னர் இது குறித்து விளக்கம் அளித்த வீடமைப்பு ஊராட்சி மன்றங்களுக்கு பொறுப்பான ஆட்சிக் குழு உறுப்பினர் யோங் சூ கியோங், மாநில அரசாங்கம் கார் நிறுத்துவதற்கு இ- பார்க்கிங் முறையை ஏற்கனவே அறிமுக்கப்படுத்தி இருப்பதை சுட்டிக்காட்டினார்.

The post பேரா முழுவதும் ஒரே மாதிரியான கார் நிறுத்துமிட கூப்பன் அறிமுகம்! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!