International
மலேசியா

போர்ப் பதற்றம்: மலேசிய பயணிகள் கவனம் தேவை! -விஸ்மா புத்ரா

கோலாலம்பூர், பிப். 28 – காஷ்மீருக்குச் செல்ல விரும்பும் மலேசியர்கள் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மூண்டுள்ள போர் பதட்டத்தை அணுக்கமாகக் கண்காணித்த பின்னரே முடிவெடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிமுக்கியம் இல்லாத பயணங்களை ஒத்திவைப்பதே சிறந்ததாக இருக்கும் என விஸ்மா புத்ரா வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே, அங்கு செல்ல பதிவு செய்யப்பட்ட பயணங்களில் பல ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் நிலைமை மோசமாக இருப்பதால் அங்கு செல்வதை ஒத்தி வைக்க வேண்டுமென பல சுற்றுலா நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.

எனினும், பொதுமக்கள் புதுடில்லியிலும் இஸ்லாமாபாத்திலும் உள்ள மலேசிய தூதரரகங்களோடு தொடர்பு கொண்டு, ஆகக் கடைசியான நிலவரங்களைத் தெரிந்து கொண்டு தங்களின் பயணங்களை முடிவு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

The post போர்ப் பதற்றம்: மலேசிய பயணிகள் கவனம் தேவை! -விஸ்மா புத்ரா appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!