International
மலேசியா

போலீசாரால் தேடப்பட்ட இருவர்: காரில் விரட்டிப் பிடித்த போலீசார்!

கோலாலம்பூர், பிப். 28 – போலீசாரால் தேடப்பட்டு வந்த போதைப் பொருள் கடத்தல் பேர்வழிகள் இருவர் சென்ற காரை பின் தொடர்ந்து விரட்டிய போலீசார் முடிவில் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்

நேற்று மாலை 5.15 மணியளவில், தலைநகர் கோம்பாக் சாலையின் சமிக்ஞை விளக்குப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பயணித்த காரை போலீசார் நெருங்கியபோது, அது போலீஸ் ரோந்துக் காரை மோதிய பின்னர், அசுர வேகத்தில் அங்கிருந்து தப்பித்துச் சென்றது.

அதிவேகத்தில் செலுத்தப்பட அந்தக் கார், ஒரு மோட்டார் சைக்கிளையும் 5 கார்களையும் மோதிய பின்னர், தீடீரென பக்க வட்டச் சாலையில் வளைந்து, வாகனங்களுக்கு நேர் எதிராகச் செலுத்தப்பட்டது.

ஒரு சமயத்தில், அந்தக் கார் பின்னோக்கிச் செலுத்தப்பட்டு போலீஸ் வாகனத்தை மோதியதோடு போலீஸ்காரர் ஒருவரை மோதித் தள்ளவும் முனைந்தது. பின்னர் கோம்பாக் கம்போங் லே கோங் செங்கில் சாலை முடிவடைந்த நிலையில் அது மேலும் செல்லமுடியாமல் தடைபட்டது.

அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட போலீசார், எச்சரிக்கை வேட்டுகளைக் கிளப்பிய பின்னர், அந்த 33 மற்றும் 37 மதிக்கத்தக்க இரு ஆடவர்களை மடக்கிப் பிடித்தனர்.

சோதனையில், அந்த ஆடவர்கள் போதைப்பொருள் குற்றங்களுக்காகத் தேடப்பட்டு வந்தவர்கள் என தெரிய வந்ததாகக் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் மஸ்லான் லாஸிம் தெரிவித்தார்

The post போலீசாரால் தேடப்பட்ட இருவர்: காரில் விரட்டிப் பிடித்த போலீசார்! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!