International
மலேசியா

போலீஸ் நிலைய கழிவறையில் கற்பழிப்பு: நீதிமன்றத்தில் மறுத்தார் போலீஸ்காரர்!

மிர்ரி, மார்ச்.3- போலீஸ் நிலையத்தில் 19 வயதுடைய இளம்  பெண்ணைத் தாக்கி கற்பழித்ததாக தம் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுக்களையும் மறுத்து போலீஸ்காரர் ஒருவர் விசாரணை கோரினார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிருபணமானால் மிக நீண்ட காலச் சிறைத் தண்டனையை இவர் எதிர்நோக்கக் கூடும் என்று கருதப்படும் நிலையில் 53 வயதுடைய அந்தப் போலீஸ்காரர் தன் மீதான இரு குற்றச்சாட்டுக்களையும் நீதிமன்றத்தில் மறுத்தார்.

இவருக்கு இரு நபர்கள் உத்தரவாதத்தின் பேரில் 30 ஆயிரம் ரிங்கிட் ஜாமின் அனுமதியை நீதிமன்றம் வழங்கியது. இந்த வழக்கு அடுத்து ஜூன்மாதம் 24ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரையில் நடைபெறும்.

இந்தக் கற்பழிப்புச் சம்பவம் சாரிக்கி என்றமிடத்திலுள்ள போலீஸ் நிலையத்தின் கழிவறையில் நடந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்த இளம் தன்னுடைய சகோதரியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக கூச்சிங்கில் இருந்து சிபுக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்த போது சாரிக்கி பஸ் நிலையத்தில் பஸ் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

அப்போது அவர் கழிவறைக்குச் சென்று திரும்பி வந்த போது பஸ் புறப்பட்டு போய்விட்டது. இதனால் தனித்து விடப்பட்ட அந்தப் பெண்ணை அணுகிய போலீஸ்காரர் ஒருவர், போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக விட்டு விடுவதாக கூறி
வாகனத்தில் அழைத்துச் சென்றார்.

பின்னர் அங்கு அவரை தாக்கியதோடு போலீஸ் நிலைய கழிவறையில் அவரைக் கற்பழித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

The post போலீஸ் நிலைய கழிவறையில் கற்பழிப்பு: நீதிமன்றத்தில் மறுத்தார் போலீஸ்காரர்! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!