International
மலேசியா

மகளின் தலையில் சுத்தியலால் அடித்த தந்தை கைது ! நடந்தது என்ன?

கோலக் குராவ், மார்ச், 6- படித்துவிட்டு வேலைத் தேடுவதில் அலட்சியமாக இருந்ததாக கூறப்பட்ட பட்டதாரி பெண் ஒருவரை அவருடைய தந்தை ஆத்திரத்தில் சுத்தியலால் அடித்து படுகாயப் படுத்தியதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் கோலக் குராவ், பாரிட் சுங்கை மேலான் என்ற இடத்தில் இரு தினங்களுக்கு முன்னர் நடந்தது. தலையில் கடுமையான காயத்திற்குள்ளான 24 வயதுடைய அந்தப் பெண், பாரிட் புந்தார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதனிடையே சுத்தியலால் மகளைத் தாக்கியதாக கூறப்பட்ட 58 வயதுடைய அந்தத் தந்தை, அதன் பின்னர் மகளைத் தாக்கியதற்காக மனவேதனை அடைந்து தன் தலையைத் தானே சுவரில் மோதிக் காயப்படுத்திக் கொண்டார்.

இதனால், அவருடைய தலையில் ஐந்து தையல்கள் போடப்பட்டுள்ளன. தலையில் ஏற்பட்ட காயத்திற்காக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்த போது அந்தத் தந்தையைப் போலீசார் கைது செய்தனர் கிரியான் மாவட்ட போலீஸ் படைத் தலைவர் ஓமார் பக்தியார் யாக்கோப் தெரிவித்தார்.

பட்டப் படிப்பை முடித்து விட்டு, வேலைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த தன் மகள், அதில் அவ்வளவு அக்கரை காட்டாமல் காலம் கடத்திக் கொண்டு வந்ததால் ஆத்திரம் அடைந்த ஒரு மரத் தச்சரான அந்தத் தந்தை சுத்தியலால் மகளின் தலையில் அடித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஓமார் பக்தியார் சொன்னார்

The post மகளின் தலையில் சுத்தியலால் அடித்த தந்தை கைது ! நடந்தது என்ன? appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!