International
மலேசியா

/மசீசவும் மஇகாவும் தேசிய முன்னணியிலிருந்து விலகினால் பாதகமில்லை – நஸ்ரி அஸிஸ்

கோலாலம்பூர், மார்ச் 4 –  மசீசவும் மஇகாவும் தேசிய முன்னணியிலிருந்து விலகி புதிய கூட்டணியை அமைத்தால், அதில் தேசிய முன்னணிக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் நஸ்ரி அஸிஸ் குறிப்பிட்டுள்ளார்.

செமிஞ்சே இடைத்தேர்தலில் நஸ்ரியின் இனவாதப் பேச்சானது உறுப்புக் கட்சிகளை உதாசீனப் படுத்தியுள்ளதாகவும் இதுவரை கூட்டணியில் கட்டிக் காக்கப்பட்டு வந்த நல்லிணக்கத்துக்குக் கெடுதலை உருவாக்கியிருப்பதால் , வேறு வழியின்றி புதிய கூட்டணியை ஏற்படுத்த மசீசவும் மஇகாவும் முனைந்துள்ளதாக அறிவித்திருந்தன. மேலும், அவரின் தலைமைச் செயலாளர் நியமனத்தை தாங்கள் அங்கீகரிக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

தமது தலைமைச் செயலாளர் பதவியானது தேசிய முன்னணியின் தலைவரால் நியமிக்கப்பட்டதாகவும், அவருக்கு அந்த உரிமை உள்ளதாகவும் தாம் தேர்தல் பரப்புரையில்  இனத் துவேஷமாகப் பேசவில்லை என்றும் நஸ்ரி குறிப்பிட்டிருந்தார்.

நஸ்ரி மேலும் கூறுகையில், தேசிய முன்னணி, பாஸ், கிம்மா , மக்கள் சக்தி மற்றும் இதர கட்சிகளோடு இணைந்து கூட்டணியைப் பலப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

The post /மசீசவும் மஇகாவும் தேசிய முன்னணியிலிருந்து விலகினால் பாதகமில்லை – நஸ்ரி அஸிஸ் appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!