International
மலேசியா

மனிதக் கடத்தல்-கொத்தடிமை வேலைக்கு எதிராக அரசு போரில் குதிக்கும்! -குலா

கோலாலம்பூர், பிப்.12- மனிதக் கடத்தல் மற்றும் கொத்தடிமையாக வேலை வாங்குதல் போன்ற செயல்களுக்கு எதிராக அரசாங்கம் போரில் குதிக்கவிருக்கிறது என மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் அறிவித்தார்.

கொத்தடிமையாக தொழிலாளர்களை வேலை வாங்கும் ‘கொடூரமான செயலுக்கு’ பல ஆண்டுகளாக மலேசியர்கள் கண்டனம் தெரிவித்து வந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறான கொடூரச் செயல்கள் குறித்து பல முறை செய்திகளில் வெளியிடப் பட்டதாகவும், மனிதக் கடத்தல் முகாம்கள் பெர்லீஸ் மாநிலத்தின் வாங் கெலியான் கண்டுப் பிடிக்கப் பட்டதாக அவர் தெரிவித்தார்.

“வாங் கெலியான் பகுதியில் கண்டெடுக்கப் பட்ட அந்த முகாம் மற்றும் அங்கு காணப்பட்டுள்ள புதை குழிகள் தொடர்பில் விசாரணை நடத்த அரச ஆணையத்தை அரசாங்கம் அமைத்துள்ளது. புதிய மலேசிய மனிதக் கடத்தல் மற்றும் கொத்தடிமையாக வேலை வாங்குவதை முற்றாக எதிர்க்கிறது” என்று குலா அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

மலேசியாவிலுள்ள பல நிறுவனங்கள் மலேசிய விதிமுறைகளை பின்பற்றி வருகின்ற போதிலும், சில நிறுவனங்கள், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

“விதிமுறைகளை மீறும் அந்நிறுவனங்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப் படும். இவ்வாறான செயல்களுக்கு எதிராக அரசாங்கம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்”” என்று அவர் உறுதியாக கூறினார்.

The post மனிதக் கடத்தல்-கொத்தடிமை வேலைக்கு எதிராக அரசு போரில் குதிக்கும்! -குலா appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!