International
மலேசியா

மலேசியாவின் பறக்கும் கார்! ஆண்டு இறுதியில் அறிமுகம்!

கோலாலம்பூர், பிப்.27- உள்நாட்டு தொழில்நுட்பத்தின் கீழ், மலேசியாவில் முதல் பறக்கும் கார் இவ்வாண்டு இறுதியில் வெளியீடு காணும் என்று தொழில்துறை மேம்பாட்டு அமைச்சரான டத்தோஸ்ரீ ரெட்சுவான் முகமட் யூசோப் கூறினார்.

அந்தப் பறக்கும் காரின் முன்மாதிரி ஏற்கனவே தயாரிக்கப் பட்டு விட்டதாக அவர் தகவல் தெரிவித்தார். “இவ்வாண்டு அந்தக் காரை தயாரிக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. அந்தத் தயாரிப்பிற்கு தேவையான தொழில்நுட்பம் தற்போது நம் கைவசம் உண்டு. அதனை எவ்வளவு சீக்கிரம் அமல்படுத்துகிறோம் என்பது தான் கேள்வி” என்று அவர் சொன்னார்.

நியாயமான வேகத்தில், குறைவான உயரத்தில் பாதுகாப்பாகவும், திறனுடனும் பறக்கக் கூடிய தன்மையை அந்தக் கார் கொண்டிருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

“அந்தக் காரின் முன்மாதிரியை தயாரிக்க கிட்டத்தட்ட ரிம.1 மில்லியன் செலவாகியுள்ளது” என்று அவர் கூறினார். புதிய தொழில்நுட்பத்தின் துணையோடு புதிய தயாரிப்புகளை அரசாங்கத்தால் தயாரிக்க முடியும் என்பதை இந்தக் கார் திட்டம் புலப்படுத்துகிறது என்று ரெட்சுவான் தெரிவித்தார்.

The post மலேசியாவின் பறக்கும் கார்! ஆண்டு இறுதியில் அறிமுகம்! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!