International
மலேசியா

மாணவர்களுக்கான ரிம250 புத்தக உதவித்தொகை மீண்டும் அமல்படுத்தப்படும் – கல்வி அமைச்சர் மஸ்லி !

கிளாந்தான், மார்ச் 4 –முன்னாள் அரசாங்கத்தின் கீழ் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான ஒரே மலேசியா ரிம250 புத்தக உதவி (BB1M) அடுத்த ஆண்டுக்குள் மீண்டும் அமல்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் உறுதியளித்துள்ளார்.

“தற்போதைய அரசாங்கத்தின் நிதி நிலைமை, மற்றும் ஏழ்மையானவர்களுக்கு உதவுவதில் முன்னுரிமை இவை இரண்டு காரணங்களால் இவ்வாண்டு தொடங்கப்பட்ட உயர்க்கல்வி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டத்தின் (BPPT)  கீழ், தற்போது ரிம 100 மட்டுமே மாணவர்களுக்கு வழங்கப்படும்” என மலேசிய கிளாந்தான் பல்கலைக்கழக மாணவர்களுடனான கலந்துரையாடலில் கல்வி அமைச்சர் மஸ்லி இவ்வாறு விளக்கம் அளித்தார்.

எனினும் இந்த நிலைமையை அடுத்த ஆண்டுக்குள் தான் சரி செய்து விடுவேன் என்றும் அவர் மேலும் கூறினார்.

1.2 மில்லியன் மாணவர்கள் இந்த புதிய கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் ரிம 100 பெறவிருக்கின்ற நிலையில் அவர்கள் அனைவரும் இம்மாதம் இறுதிக்குள் பேங்க் ரக்யாட் மூலமாக இந்த உதவித் தொகையை பெறுவார்கள்.

மாணவர்களின் கல்விச் சுமையை குறைக்கும் முயற்சியில் இந்த திட்டத்திற்காக 120 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post மாணவர்களுக்கான ரிம250 புத்தக உதவித்தொகை மீண்டும் அமல்படுத்தப்படும் – கல்வி அமைச்சர் மஸ்லி ! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!