International
மலேசியா

மாணவர்கள் பாதித்த நச்சு வாயு: கப்பல் கழுவும் இரசாயனக் கழிவா?

பாசீர் கூடாங், மார்ச். 9- கப்பல் கழுவுவதற்கு பயன்படுத்தப்பட்ட இராசாயனக் கழிவை ஆற்றுப் பகுதியில் கொட்டியதன் விளைவாக, இங்குள்ள தாமான் பாசீர் பூத்தேவிலுள்ள இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளானதாக தெரிய வந்துள்ளது.

இராசயன நச்சு வாயுவைச் சுவாசித்ததால் இதுவரை மாணவர்கள் உள்பட 79 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றனர்.

மார்ச்-7 ஆம் தேதி அதிகாலையில் கிம் கிம் ஆற்றிலிருந்து பரவிய நச்சு வாயுவின் காரணமாக தாமான் பாசீர் பூத்தேயிலுள்ள இடைநிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் வாந்தி மயக்கத்திற்கு உள்ளாயினர். இவ்விரு பள்ளிகளும் மூன்று நாள் மூடப்பட்டன.

இந்நிலையில் இந்த நச்சுக் கழிவு தொடர்பான விசாரணை நடத்தியதில் கப்பல் கழுவுவதற்கு பயன்படுத்தப்பட்ட இராசயனக் கழிவு ஆற்றில் கொட்டப்பட்டதால் அதிலிருந்து மெத்தென் என்ற நச்சு வாயு காற்றில் பரவியதாக தெரியவந்துள்ளது.

இத்தகைய இராசயனக் கழிவுகள் அப்பகுதியிலுள்ள 30 தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்பட்டவை எனத் தெரிகிறது. ஆற்றோரப் பகுதிகளில் 1.3 கிலோமிட்டர் தொலைவுக்கு நச்சுக் கழிவு பாதிப்பை சுத்தப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

இத்தகைய கழிவுகளை கொட்டியதாக குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் அந்தக் குற்றத்தைப் புரிந்தவர்களுக்கு 1994- ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் தரப் பாதுகாப்புச் சட்டத்தின் 34-பி பிரிவின் கீழ், ஐந்து ஆண்டு சிறை, மற்றும் 5 லட்சம் ரிங்கிட் வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

The post மாணவர்கள் பாதித்த நச்சு வாயு: கப்பல் கழுவும் இரசாயனக் கழிவா? appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!