International
மலேசியா

முன்னாள் கணவரின் கடனுக்காக அச்சுறுத்தலா? -மனைவி வேதனை

கோலாலம்பூர், மார்ச். 5- விவாகரத்து செய்து கொண்ட பின்னரும், முன்னாள் கணவரின் கடனை ‘நான் செலுத்த வேண்டுமென அச்சுறுத்துவது ஏன்/’ என 62 வயதான பெண்ணொருவர் புகார் தெரிவித்துள்ளார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் தாம் அந்த நபரை விவாகரத்து செய்து விட்டதாகவும் அவர் 15 வட்டி முதலைகளிடமிருந்து பெற்றதாகக் கூறப்படும் 130,000 ரிங்கிட் கடனைக் கேட்டு கடன் அவர்கள் தமக்குத் தொந்தரவு கொடுத்து வருவதாகவும் மேடம் சான் என்று அடையாளம் கூறப்பட்ட அந்த பெண்மணி மசீச புகார் பிரிவில் தெரிவித்துள்ளார்.

அந்தக் வட்டி முதலைகள், செராஸில் இருக்கும் தமது வீட்டின் மீது சாயத்தை ஊற்றியதாகவும் அந்தக் காட்சி தமது சிசிடிவியில் பதிவு செய்யப் பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த முன்னாள் கணவர் ஒரு சூதாடி என்றும் இதற்கு முன்னர், அவர் பெற்றிருந்த 900,000 கடனை தாம் 2004ஆம் ஆண்டு செலுத்தியுள்ளதாகவும் அந்தப் பெண்மணி தெரிவித்தார்.

அவரின் தொல்லை பொறுக்க முடியாததால் கடந்தாண்டு ஜூலையில் அவரை வீட்டை விட்டுத் துரத்தியதாகவும், இரண்டு மாதத்திற்கு முன்னர்தான் தாம் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

வட்டி முதலைகள் அம்மாதிரியான மிரட்டல்கள் விடுப்பதையும் தொந்தரவு செய்வதையும் விடுத்து சம்பந்தப்பட்ட நபரிடம் கடனை வசூலித்துக் கொள்ளும்படி புகார் பிரிவின் தலைவர் டத்தோ மைக்கல் சோங் வலியுறுத்தினார்.

The post முன்னாள் கணவரின் கடனுக்காக அச்சுறுத்தலா? -மனைவி வேதனை appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!