International
மலேசியா

ரந்தாவுக்கு இந்திய வேட்பாளரே பொருத்தமானவர்! -பிகேஆர் தங்கம்

கோலாலம்பூர், மார்ச் 7 – ரந்தாவ் சட்டமன்ற இடைதேர்தலுக்குப் பக்காத்தான் சார்பில் ஓர் இந்திய வேட்பாளரே பொருத்தமானவர் என ரெம்பாவ் பிகே ஆர் தலைவர் ஆர்.தங்கம் குறிப்பிட்டார்.

அவர் உள்ளூர்காரராகவும் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றவராகவும் இருக்க வேண்டும். வெளியிலிருந்து வரும் ‘பாராசூட்’ வேட்பாளர்களைக் கொண்டுவரத் தேவை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இத்தொகுதியில் 46 விழுக்காட்டு வாக்காளர்கள் மலாய்க்காரர் அல்லாதவர்களாக இருப்பதால், மலாய்க்கார வேட்பாளர் மட்டுமே வெற்றிபெற முடியும் என்ற கூற்றை ஏற்க முடியாது.

மலாய்க்காரர்களின் 15- 20 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றாலே, பக்காத்தான் வெற்றிபெற போதுமானது எனவும் தங்கம் தெரிவித்தார்.

The post ரந்தாவுக்கு இந்திய வேட்பாளரே பொருத்தமானவர்! -பிகேஆர் தங்கம் appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!