International
மலேசியா

ரிம. 10,000க்கும் குறைந்த சம்பளம்: அந்நிய தொழிலாளர்கள் நிறுத்தம்! -குலா

கோலாலம்பூர், பிப்.28 – பத்து ஆயிரம் ரிங்கிக்கும் குறைவான சம்பளம் பெறும் திறன்முக்க அந்நிய நாட்டுத் தொழிலாளர்களைத் தருவிக்கும் நடவடிக்கையை அரசு நிறுத்திக் கொள்ளும் என மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.

தற்போது, 10,000 ரிங்கிட்டுக்கும் மேல் சம்பளம் பெறுவோர் முதல் பிரிவாகவும், 5,000லிருந்து 10,000 ரிங்கிட் வரையிலான சம்பளம் இரண்டாம் பிரிவாகவும் 5,000 ரிங்கிட்டுக்கு குறைவான சம்பளம் மூன்றாம் பிரிவாகவும் வகை படுத்தப்பட்டுள்ளது.

அதில், முதல் பிரிவைத் தொடர்ந்து வைத்திருக்கவும் இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரிவுகளை ரத்து செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளதாக குலசேகரன் குறிப்பிட்டார். அந்தப் பிரிவுகளில் உள்ள வேலைகளை உள்ளூர் தொழிலாளர்களைக் கொண்டு நிரப்பவே அதன் நோக்கம் என அவர் தெரிவித்தார்.

கடந்தாண்டு பல்வேறு துறைகளில் மொத்தம் 117,000 வெளிநாட்டினர் வேலை செய்திருப்பதாகவும் அதில் 2,158 பேர் மூன்றாம் பிரிவில் வேலை செய்து வந்ததாகவும் குலசேகரன் குறிப்பிட்டார்.

The post ரிம. 10,000க்கும் குறைந்த சம்பளம்: அந்நிய தொழிலாளர்கள் நிறுத்தம்! -குலா appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!