International
மலேசியா

ரிம 60 மில்லியன் நகைகள் எங்கே? ரோஸ்மா தான் பொறுப்பு! -நகைக்கடை

கோலாலம்பூர், பிப்.12- லெபனானின் ‘குளோபல் ரோயல்டி டிரேடிங் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான 44 வகை நகைகள் எங்கே இருக்கின்றன? என்பதை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் தான் நிரூபிக்க வேண்டும் என்று அந்த நகைக் கடை உரிமையாளரின் வழக்கறிஞர் வலியுறுத்தினார்.

அந்த நகைகள் அனைத்தும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ரோஸ்மா கூறியுள்ள வேளையில், அவை உண்மையிலேயே பறிமுதல் தான் செய்யப் பட்டுள்ளன என்பதை நிரூபிக்கும் பொறுப்பு ரோஸ்மாவையே சேரும் என்று வழக்கறிஞர் டத்தோ டேவிட் குருபாதம் கூறினார்.

கடந்தாண்டு ஜூன் மாதம் 26-ஆம் தேதியன்று, ரிம.60.21 மில்லியன் தொகை பெறுமானமுள்ள நகைகள் ரோஸ்மாவின் பார்வைக்கு அனுப்பி வைக்கப் பட்டதாகவும், அந்த நகைகள் தம்மிடம் திருப்பித் தரப்பட வேண்டும் என்று குளோபல் ரோயல்டி டிரேடிங் நிறுவனம் ரோஸ்மா மீது நஷ்ட ஈடு வழக்கை தொடர்ந்தது.

அதன் அடிப்படையில், அந்த நகைகள் உண்மையிலேயே எங்கு உள்ளன? என்பதை தெரிந்துக் கொள்ளும் உரிமை தனது கட்சிக்காரருக்கு உண்டு என்றும், அந்த நகைகள் பறிமுதல் செய்யப் படாவிடில், குற்றவியல் வழக்கு ரோஸ்மா மீது தொடங்கப் படலாம் என்றும் குருபாதம் தெரிவித்தார்.

“அந்த நகைகள் பறிமுதல் செய்யப்படாவிடில், அந்த நகைக்கடையுடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில், அந்த நகைகளுக்கான முழுத் தொகையையும் ரோஸ்மா செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்.

அதுமட்டுமல்லாது, ஆதாரங்களைக் கொண்டு தான் ஒரு வழக்கிற்கான தீர்ப்பை நீதிமன்றத்தால் வழங்க முடியும். அதற்காகவும், அந்த நகைகள் எங்கு உள்ளன என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு உண்டு” என்று அவர் குறிப்பிட்டார்.

The post ரிம 60 மில்லியன் நகைகள் எங்கே? ரோஸ்மா தான் பொறுப்பு! -நகைக்கடை appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!