International
மலேசியா

“ரொக்கமாகக் கடனைத் தந்து விட்டேன்! நீதிமன்றத்திலும் நிருபிக்க தயார்!” -ஶ்ரீராம்

கோலாலம்பூர், மார்ச். 11- சிகாமட் எம்.பி.யான எட்மண்ட் சந்தாரா விடம் நான் பெற்ற 60 ஆயிரம் ரிங்கிட் கடனை கடந்த அக்டோபர் மாதத்திலேயே ரொக்கமாகச் செலுத்தி விட்டேன். இதனை நீதிமன்றம் சென்றாலும் நிருபிக்கத் தயாராக இருக்கிறேன் என்று ரெம்பாவ் தொகுதி பிகேஆர் துணைத் தலைவரான டாக்டர் ஶ்ரீராம் சின்னச்சாமி தெரிவித்தார்.

அடுத்து ரந்தாவில் சட்டமன்ற இடைத்தேர்தல் நெருங்கி விட்ட சூழ்நிலைக்கும் தாம் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்று வெளிவந்திருக்கும் குற்றச்சாட்டுக்கும் ஒன்றுகொன்று தொடர்பு இருக்கக்கூடிய சாத்தியம் இருப்பதை தாம் நிராகரிப்பதற்கு இல்லை என்று அவர் சொன்னார்.

இது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தாம் கட்சியின் தலைமைத்துவத்துடன் விவாதிக்கவிருப்பதாகவும் இந்தக் கடன் பிரச்னைத் தொடர்பில் ஏற்கெனவே கட்சியின் உள்விசாரணையின் போது சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் பணம் செலுத்தப்பட்டதற்கான ஆதாரங்களையும் தாம் சமர்த்திருப்பதாகவும் ஶ்ரீராம் சொன்னார்.

அந்தப் ப்பணத்தை ரொக்கமாக எட்மண்ட் சந்தாராவின் சிறப்பு அதிகாரியிடம் தாம் ஒப்படைத்து விட்டதாக கூறிய டாக்டர் ஶ்ரீராம், இந்தப் பிரச்னை நீதிமன்றத்திற்கு சென்றாலும் தம்மிடம் ஆதாரம் இருக்கிறது என்று தெரிவித்தார்.

முதலில் தம்முடைய நண்பரான எட்மண்ட் சந்தாரா, இந்தப் பிரச்னையை போலீஸ் புகார் மூலம் பகிரங்கப்படுத்திய போது தாம் அதிர்ச்சி அடைந்ததாகவும் ரந்தாவ் தேர்தலை முன்வைத்து தமது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த நடக்கும் முயற்சியாக இது இருக்கலாம் என்பதற்கான சாத்தியங்களும் உண்டு என்றும் அவர் விளக்கினார்.

The post “ரொக்கமாகக் கடனைத் தந்து விட்டேன்! நீதிமன்றத்திலும் நிருபிக்க தயார்!” -ஶ்ரீராம் appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!