International
மலேசியா

ரோஸ்மாவை கேலி செய்யும் பதாகை: கிழித்து எடுத்தார் லொக்மான்!

செமினி, மார்ச், 2- செமினி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடந்து வரும் நிலையில் இத்தொகுதியில் வைக்கப்பட்டிருந்த சர்சைக்குரிய பதாகையை அம்னோ உச்சமன்ற உறுப்பினரான லொக்மான் அடாம் கிழித்து எடுத்தார்.

இங்கு வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா பற்றிய அந்தப் பதாகை கடும் சர்ச்சைகளைக் கிளப்பி உள்ளது.

“யார் போஸ்? நான் தான் போஸ்” என்று அவர் கூறுவதைப் போன்று பதாகை வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பதாகையை அகற்றுவதற்கு அதிகாரிகள் முயன்றதாகவும் ஆனால் குறிப்பிட்ட கட்சி ஒன்றின் ஆதரவாளர்கள் அதனைத் தடுத்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அந்த இடத்திற்கு விரைந்து வந்த லொக்மான் ரோஸ்மாவைக் கேலி செய்யும் அந்தப் பதாகையை பிடித்து இழுத்து அதிலிருந்த ரோஸ்மா படத்தையும் வாசகத்தையும் கிழித்து எடுத்து அப்புறப்படுத்தினார்.

இந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த அம்னோ ஆதரவாளர்களுக்கும் பக்காத்தான் ஆதரவாளர்களுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது.

The post ரோஸ்மாவை கேலி செய்யும் பதாகை: கிழித்து எடுத்தார் லொக்மான்! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!