International
மலேசியா

லிஃப்டில் பெண்ணைத் தாக்கிக் கொள்ளை; குற்றச்சாட்டை மறுத்தார் ஆடவர்!

கோலாலம்பூர், மார்ச் 1- செராஸ், தாமான் முத்தியாரா எம்ஆர்டி லிஃப்டில் பெண்மணி ஒருவரைக் கடுமையாகத் தாக்கி அவரிடம் கொள்ளையிட்ட ஆடவன் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

தம்மீது சுமத்தப்பட்ட அந்தக் குற்றச்சாட்டை பராமரிப்பு வேலையைச் செய்துவரும் 26 வயதான ஜி.தீனதயாளன் என்ற நபர் மறுத்து விசாரணை கோரினார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுச் சிறை, அபராதம் மற்றும் பிரம்படியும் கொடுக்க சட்டம் வகை செய்கிறது.

பிப்ரவரி 14ஆம் தேதி, காலை 6.45 மணியளவில் 40 வயதான லீ மீ ஷான் என்ற பெண்மணியை அடித்து, உதைத்து இரக்கமற்ற முறையில் தாக்கி, அவரின் மைகார்டு, ஏடிஎம் கார்டு மற்றும் ரிம. 400 ரொக்கத்தையும் அபகரித்துச் சென்ற காட்சி கண்காணிப்புப் புகைப்படக் கருவியின் ஒளிப்பதிவு வைரலாகப் பரவி பொதுமக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஐந்து நாள்களுக்குப் பின்னர், இரவு 8.10 மணியளவில் தாமான் செராஸில் அந்த ஆடவன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post லிஃப்டில் பெண்ணைத் தாக்கிக் கொள்ளை; குற்றச்சாட்டை மறுத்தார் ஆடவர்! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!