International
மலேசியா

லைசென்ஸ் இல்லாமல் நாணய வர்த்தகம்: 8 மையங்களில் அதிரடி சோதனை!

கோலாலம்பூர், பிப்,14- லைசென்ஸ் இல்லாமல் செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் நாணய மாற்று வர்த்தக மையங்களுக்கு எதிராக பேங்க் நெகாரா அதிரடி சோதனைகளில் இறங்கியது.

கோலாலம்பூர் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் மற்றும் ஜாலான் டத்தோ கிராமட் ஆகிய பகுதிகளில் எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

2011 ஆம் ஆண்டின் நிதிச் சேவை வர்த்தகச் சட்டத்தின் 7(1) ஆவது பிரிவின் கீழ், போலீசாரும் குடிநுழைவுத் துறையினரும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த நிதிச் சேவை வர்த்தகச் சட்டத்தின் கீழ்,லைசென்ஸ் இல்லாமல் நாணய மாற்று வர்த்தகத்தில் ஈடுபடுவது குற்றமாகும்.

இத்தகைய குற்றத்தைப் புரிபவர்களுக்கு 5 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேற்போகாத அபராதம், அல்லது 10 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

இந்த நடவடிக்கையின் போது இந்த மையங்களை பராமரித்து வந்த 5 சட்டவிரோத தொழிலாளர்களையும் குடிநுழைவுத் துறையினர் கைது செய்தனர்.

The post லைசென்ஸ் இல்லாமல் நாணய வர்த்தகம்: 8 மையங்களில் அதிரடி சோதனை! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!