International
மலேசியா

வார இறுதி நாள்களில் மட்டுமே ஜாலான் தாரில் வாகனங்களுக்கு தடை

கோலாலம்பூர், மார்ச் 9 – தலைநகர், ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலையில் (தார்) வார இறுதி நாள்களில் மட்டுமே வாகனங்களுக்குத் தடை விதிக்கப்படும்.

நேற்று கூட்டரசுப் பிரதேச அமைச்சு, மாநகர் மன்றம் மற்றும் வர்த்தகத் தரப்பினர் ஆகியோருடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் அந்த முடிவு எடுக்கப் பட்டதாகத் அறிவிக்கப் பட்டுள்ளது.

ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பேருந்துகள், டாக்சிகள், ஆம்புலன்ஸ்கள் ஆகியவை அனுமதிக்கப்படும் என்றும் தனியார் வாகனங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இதற்கு முன்னர், மார்ச் 15-லிருந்து அந்தச் சாலையில் பாதசாரிகள், பேருந்துகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என அமைச்சு அறிவித்ததால் வர்த்தகர்களின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

The post வார இறுதி நாள்களில் மட்டுமே ஜாலான் தாரில் வாகனங்களுக்கு தடை appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!