International
மலேசியா

விடுமுறை வேண்டுமா? இறந்தவருடன் ஒரு செல்பி…!

பெங்களூரு, மார்ச்.10- பெங்களூர் மாநிலத்தில் சடலத்துடன் செல்பி எடுத்து ஆதாரம் காட்டினால் மட்டுமே விடுமுறை அளிப்பது பெங்கங்களரு போக்குவரத்து துறையில் தொடர்ந்து நடந்து வருவதாக வெளிவந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு மாநகர போக்குவரத்து துறையின் டிப்போவின் மேலாளராக இருப்பவர் பிரசாந்த். இவர் சமீபத்தில் அதிரடியாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.

இவர் குறித்த விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. கண்டெக்டர்கள் மற்றும் டிரைவர்களின் உறவினர்கள் யாராவது இறந்து விட்டால் அதில் கலந்து கொள்ள டிப்போ மேலாளரிடம் விடுமுறை கேட்பது வழக்கம்.

ஆனால், பிரசாந்த் விடுமுறை கொடுப்பதில்லை. மாறாக சடலத்துடன் செல்பி எடுத்து அனுப்பினால் மட்டுமே அனுமதி அளித்து வந்ததாக கூறப்பட்டது.

செல்பி எடுக்காதவர்களுக்கு விடுமுறை அளிக்கப் படாததும் பணிக்கு வரவில்லை என்ற விசாரணைக்கு உட்பட நேர்ந்ததும் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது இது குறித்து தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விடுமுறை வேண்டுமா? இறந்தவருடன் ஒரு செல்பி…! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!