International
மலேசியா

விலை குறைந்தாலும் சந்தையில் முட்டை பற்றாக் குறையா?

கோலாலம்பூர், மார்ச் 10 – அண்மைய காலமாக சந்தையில் முட்டையின் விலை குறைந்து இருந்தாலும் போதுமான முட்டைகள் கிடைப்பதற்கு வகை செய்யப்படும் என தேசிய கால்நடைக் கழகம் உறுதி கூறியுள்ளது.

முட்டையின் விலை பல்வேறு காரணங்களினால், ஏறி இறங்குவதாகவும் ஒரு கோழி 6 மாத காலத்திற்குப் பின்னரே முட்டையை உற்பத்தி செய்ய முடியும் என்றும்னாது தெரிவித்துள்ளது.

முட்டைகளை நீண்ட காலத்திற்கு கிடங்கில் வைத்திருக்க முடியாது. மேலும் முட்டை உற்பத்தியில் தடை ஏற்பட்டாலும் சந்தையில் அதன் பற்றாக்குறை ஏற்படும்.

கோழிகளுக்கு ஏற்படும் நோய், கோழிகளின் இறப்பு போன்ற காரணங்களினாலும் முட்டையின் உற்பத்தி குறைந்து, விலை உயர்வுக்குக் காரணமாக இருக்கும் என அக்கழகம் தெரிவித்துள்ளது.

The post விலை குறைந்தாலும் சந்தையில் முட்டை பற்றாக் குறையா? appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!