International
மலேசியா

வெப்பம் கடுமையாகலாம் – நிபுணர்கள் எச்சரிக்கை

கோலாலம்பூர், பிப். 27 – உலகளவில் வெப்பம் அதிகரித்து வருவதால், மலேசியாவில் தற்போதுள்ள கோடை காலம் நீடிக்கும் என்றும் அதனைத் தொடர்ந்து கடுமையான மழையும் பெய்யலாம் என வானிலை ஆய்வு நிபுணர்கள் கருத்துரைக்கின்றனர்.

தேசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஃபிரெடோலின்,  வட கிழக்குப் பருவ காலத்தினால் ஏற்படும் கோடைகால வெப்பம்,  எல் நினோ, மற்றும் சூரியனின் வெப்பம் நேரடியாகத் பூமியைத் தாக்குதல் போன்ற காரணங்களினால், நாட்டின் வெப்பம் 40 பாகை செல்சியஸூக்கு மேலும் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக எச்சரித்தார். 

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு,  பிப்ரவரி 25லிருந்து தொடர்ந்து 3 நாள்களுக்கு நாட்டின் வெப்ப அளவு 35 லிருந்து 37 பாகை செல்சியஸுக்கு உயர்ந்ததை முதல் கட்ட  அபாயம் என வானிலை ஆய்வு மையம்  அறிவித்தது. 

வெப்பம்  3 நாள்களுக்குத்  தொடர்ந்து 37 பாகைக்கு மேல் அதிகரித்தால்,  அது இரண்டாம் கட்ட அபாயம் என்றும், அக்காலக் கட்டத்தில் பள்ளிகள் மூடப்பட வேண்டும்.  வெப்பம் தொடர்ந்து 3 நாள்களுக்கு 40 பாகைக்கும் அதிகமானால், அது 3ஆம் கட்ட அபாயம் என்றும் அக்காலக் கட்டத்தில் நாட்டில் அவசர காலம் பிரகடனப் படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

The post வெப்பம் கடுமையாகலாம் – நிபுணர்கள் எச்சரிக்கை appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!