International
மலேசியா

ஶ்ரீமகா மாரியம்மன் தேவஸ்தானம்: ஒட்டுமொத்தமாக விலக வேண்டும்! – ஆகம அணி

கோலாலம்பூர், மார்ச். 6- நூற்றாண்டு காலமாக நாட்டின் தாய்க் கோயிலாக விளங்கிவரும் கோலாலம்பூர் ஶ்ரீமகா மாரியம்மன் தேவஸ்தானத்தில் நிர்வாகக் குழுவான உபயக்காரர்கள் அனைவரும் முற்றாக விலக வேண்டுமென இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது மலேசிய இந்து ஆகம அணியின் தலைவர் அருண் துரைசாமி வலியுறுத்தியுள்ளார்.

இம்மாதம் 4ஆம் தேதி ஊழல் தடுப்பு ஆணையத்தின்(எம்ஏசிசி) அதிகாரிகள், தேவஸ்தானத் தலைவர் தலைவர் டான்ஶ்ரீ நடராஜாவின் வீட்டில் அதிரடி சோதனையை நடத்தியதை அடுத்து அவர் உள்பட மூவர் குஎம்ஏசிசியினால் கைது செய்யபட்டு, விசாரணைக்காக 3 நாள்களுக்குத் தடுத்து வைக்க நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர்.

இந்த நடவடிக்கையானது பத்துமலை கோயிலுக்கு சொந்த நில மேம்பாடு தொடர்பில் முறைகேடு நடந்துள்ளதாக சந்தேகத்தின் பேரில், எம்ஏசிசி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இது சம்பந்தமாக இன்று மலேசிய ஆகம அணி எனும் அரசு சாரா இயக்கத்தின் தலைவர் அருண் துரைசாமி கூட்டிய செய்தியாளர் கூட்டத்தில் இரண்டு விவகாரங்களை தாம் மலேசிய இந்துக்களின் சார்பில் தேவஸ்தான நிர்வாகத்திடம் முன் வைப்பதாகவும், அதனை நிர்வாகம் உடனடியாக நிறைவேற்ற வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.

கோலாலம்பூர் ஶ்ரீமகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் கீழ் ஜாலான் பண்டார் மகா மாரியம்மன் ஆலயம், கோர்ட்டு மலை ஶ்ரீகணேசர் ஆலயம் மற்றும் பத்துமலை முருகன் ஆலயம் ஆகியவை இயங்கி வருகின்றன.

தேவஸ்தானத்தில் பல ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகள், நிகழ்ந்துள்ளதாக தாங்கள் புகார் தெரிவித்ததோடு பல சமூக ஆர்வலர்களும் அதிருப்தியை வெளியிட்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் நில விவகாரம் தொடர்பிலான ஆதாரங்களை தாங்கள் எம்ஏசிசியிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் அதன் அடிப்படையிலேயே தற்போது , மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

எனவே, நிர்வாகத்தைச் சீரமைத்து, ஊழல்கள் இல்லாத நிர்வாகக் குழுவை உருவாக்கவும் இந்துக்களின் நம்பிக்கையைப் பெறவும் தற்போதுள்ள அதன் தலைவர் டான்ஶ்ரீ நடராஜா, அவரின் மகன் டத்தோ என்.சிவகுமார் மற்றும் 6 முக்கியஸ்தர்களும் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.

மேலும் ஆலயத்தின் 63 உபயக்காரர்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து, முற்றாகப் பதவி விலக வேண்டுமென அருண் துரைசாமி வலியுறுத்தினார்.

அதன் பின்னர், புதிய நிர்வாகக் குழுவும்ம் உபயக்காரர்களும் நியமிக்கப்பட்டு ஆலய நிர்வாகம் நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் மலேசிய இந்துக்களின் விருப்பத்திற்கு இணங்க ஆலயம் புதுப் பொலிவு பெறுவதோடு நிர்வாகம் முறையாகவும் நிறைவாகவும் நடத்தப்படும் என அருண் துரைசாமி சொன்னார். தெரிவித்தார்.

மேலும், ஆலயத்தில் 25 ஆண்டு காலக் கணக்கு வழக்குகள் தனியார் தணிக்கையாளர்களால் தணிக்கை செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

The post ஶ்ரீமகா மாரியம்மன் தேவஸ்தானம்: ஒட்டுமொத்தமாக விலக வேண்டும்! – ஆகம அணி appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!