International
மலேசியா

ஷாகிடானின் பாலியல் தொந்தரவு வழக்கு, மார்ச் 18,19இல் விசாரணைக்கு வருகிறது !

கோலாலம்பூர், மார்ச் 4 – ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஹிடான் காசிம் மீது தொடுக்கப்பட்ட பாலியல் தொந்தரவு வழக்கு எதிர்வரும் மார்ச் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் செவிமெடுக்கப்படும்.

பிரதமர் துறையின் முன்னாள் அமைச்சரான ஷாஹிடான்,  கடந்தாண்டு அக்டோபர் 20ஆம் தேதி இரவு 11.30 மணியளவில், துவான்கு சைட் புத்ரா அரங்கின் வளாகத்தில்,   காரில் இருந்த 15 ஆண்டு 7 மாதமான பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

2017ஆம் ஆண்டு சிறார் பாலியல் குற்றச்சாட்டுச் சட்டம், பிரிவு 14(ஏ) இன் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டு சிறை, பிரம்படி அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

The post ஷாகிடானின் பாலியல் தொந்தரவு வழக்கு, மார்ச் 18,19இல் விசாரணைக்கு வருகிறது ! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!